மேலும் செய்திகள்
மணலுார்பேட்டை நுாலகத்தில் மாதிரி போட்டித் தேர்வு
13-May-2025
திருக்கோவிலுார்; மணலுார்பேட்டை அரசு பள்ளியில் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மணலுார்பேட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்ச்சி அரிமா சங்கம் சார்பில் நடந்தது. இதில், ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன் வரவேற்றார். அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் அம்மு ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், ரவிச்சந்திரன், முருகன், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் சரவணன் சொந்த செலவில், சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு தங்க மோதிரம் வழங்கினார். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. அரிமா சங்க செயலாளர் திருமால், பொருளாளர் முனியன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். முன்னாள் தலைவர்கள் ரகுபதி, துரை, முபாரக், ஆதிமூலம், மோகன், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை நன்றி கூறினார்.
13-May-2025