உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மலைக்கோட்டாலம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம்

 மலைக்கோட்டாலம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம்

கள்ளக்குறிச்சி: மலைக்கோட்டாலம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தில் 1,800க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை, ஊராட்சி தலைவரை காணவில்லை என நேற்று காலை 7.30 மணிக்கு, சாத்தனுார்- கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஊராட்சி தலைவர் கவிமொழி ராஜாராம் வெளிநாட்டில் வசிப்பதால், ஊராட்சி நிர்வாக பணிகள் முழுதும் அவரது கொழுந்தனார் தீயணைப்பு துறையில் பணிபுரியும் அன்பு மேற்கொண்டு வருகிறார். மத்திய, மாநில அரசு திட்டங்களில் மக்கள் பயன்பெற கையூட்டு பெறுவது, ஏரியில் சட்டவிரோதமாக மண் கடத்துவது, ஊராட்சி நிர்வாகத்தில் முறைகேடு என பல்வேறு புகார்களை தெரிவித்தனர். உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறி அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து, காலை 9.15 மணியளவில் அரசு பஸ்சை விடுவித்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ