அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாற்றுத்திறனாளி களை இழிவுபடுத்தி பேசியதாக அமைச்சர் துரைமுருகனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.சங்க மாவட்ட தலைவர் வேலு தலைமையில், துணை தலைவர்கள் வைத்திலிங்கம், செல்வம், செயலா ளர் ஆறுமுகம், மாவட்ட இணை செயலாளர் மாயகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கொளஞ்சி, சுதா, ரேவதி, அஞ்சலி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.