உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அபகரித்த நிலத்தை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

அபகரித்த நிலத்தை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில், அபகரித்த விளைநிலத்தை மீட்டு தரக்கோரி குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி அடுத்த மல்லியம்பாடியை சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி வெள்ளையம்மாள் உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேர் நேற்று, கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மனு அளிக்குமாறு தெரிவித்ததன் பேரில், போராட்டத்தை கைவிட்டு மனு அளித்தனர்.மனு விபரம்:கல்வராயன்மலை தாலுகா, தாழ்தேவனுாரில் எங்களுக்கு 5.95 ஏக்கர் விளைநிலம் உள்ளது. இந்த நிலத்தை தனி நபர் ஒருவர் அபகரித்து, முறைகேடாக பட்டா மாற்றம் செய்துள்ளார். நிலத்தை கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். மேலும், இடத்தை வேறொரு நபருக்கு விற்க ஏற்பாடு செய்து வருகிறார். எனவே, உரிய விசாரணை செய்து, அபகரித்த விளைநிலத்தை எனது பெயருக்கே மீண்டும் பட்டா மாற்றம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை