ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாலுகா அலுவலகத்தில் தர்ணா
திருக்கோவிலுார்: ஜி.அரியூரில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். திருக்கோவிலுார் அடுத்த ஜி.அரியூரில் பொதுப் பாதையில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதன் மூலம், பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்ல வழி இல்லாமல் தவித்து வருகின்றனர். இது தொடர்பான பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு பிறப்பித்ததாகவும். ஓராண்டை கடந்துவிட்ட நிலையிலும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் திருக்கோவிலுார் தாலுகா அலுவலகம் முன்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தாசில்தார் சரவணன் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.