மேலும் செய்திகள்
மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்
13-Apr-2025
ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் மாற்றுத்திறனாளி மாணவருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வாணாபுரம் அடுத்த அத்தியூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் பிரேம்குமார், 15; மாற்றுத் திறனாளி. இவர் தொழுவந்தாங்கலில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.பிரேம்குமார் பள்ளிக்கு சென்று வர சிரமமாக இருப்பதாகவும், சக்கர நாற்காலி வழங்கக்கோரியும் சில தினங்களுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்தார்.தகவலறிந்த தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் 1.05 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியை நேற்று முன்தினம் வழங்கினார்.நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, மாற்றுத் திறனாளி நல அலுவலர் அந்தோணிராஜ் மற்றும் துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
13-Apr-2025