உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்

மூங்கில்துறைப்பட்டு ; ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமையில் புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் 20 காச நோயாளிகளுக்கு பேரிச்சம்பழம், ஹெல்த் மிக்ஸ் பவுடர், முட்டை, கொண்டைக்கடலை, பச்சைப் பயிறு, மணிலா, மொச்சைப்பயிறு ஆகிய அடங்கிய தொகுப்பினை வழங்கினார். அப்பொழுது வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார், மருத்துவர்கள் முத்துக்குமரன், ரஞ்சிதா ஆகியோர் நோயாளிகளுக்கு காசநோய் தடுப்பு முறை பற்றி அறிவுரை வழங்கினார்கள். இதில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் துரைராஜ் ரங்கப்பனூர் ஊராட்சி செயலாளர் திருமால்வளவன், ஆய்வக மேற்பார்வையாளர் மகேந்திரன், மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் மரியபுஷ்பம், ஜெயந்தி, வசந்தி ஆகியோர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை