உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவர்களுக்கு சீருடை வழங்கல்

மாணவர்களுக்கு சீருடை வழங்கல்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி எண்ணங்களின் சங்கமம் அமைப்பு மற்றும் மனித நேயம் காப்போம் அறக்கட்டளை சார்பில் 200 ஏழை மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மனித நேயம் காப்போம் அறக்கட்டளை நிறுவனர் ஷேக் சலாவுதீன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அஜித்குமார் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சி நடுநிலைப் பள்ளி, உருது துவக்க பள்ளி, காரனுார் புனித மரியன்னை நடுநிலைப் பள்ளி, ஏமப்பேர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளை சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகள் 200 பேர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி