உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்

 பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 பி.டி.ஓ.,க்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் வட்டார பி.டி.ஓ., வாக பணிபுரிந்த சுமதி திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சின்னசேல த்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணிபுரியும் சவரிராஜன், அதே அலுவலகத்தில் வட்டார பி.டி.ஓ.,வாகவும், திருநாவலுாரில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த நாராயணசாமி, சின்னசேலம் கிராம ஊராட்சி பி.டி. ஓ.,வாகவும் பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை