உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதில் வருவாய் துறை, நிலப்பட்டா, நில அளவை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைபட்டா, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை, கூட்டுறவு கடனுதவி, மருத்துவ துறை, குடிநீர், சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 367 மனுக்கள் பெறப்பட்டது.தொடர்ந்து சம்மந்தப்பட்ட அரசு துறை அலுவலர்களிடம் விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ