மேலும் செய்திகள்
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
05-Nov-2024
கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 426 மனுக்கள் பெறப்பட்டது.கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பட்டா மாற்றம், நில அளவை, இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, தொழில் தொடங்க கடனுதவி உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த 426 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.தொடர்ந்து, உளுந்துார்பேட்டை அடுத்த மடப்பட்டு கிராமத்தில் நீரில் மூழ்கி இறந்த சிறுமி வினிதாவின் குடும்பத்தினருக்கு வருவாய்த்துறை சார்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 9 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 17 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பிரைலி கைக்கடிகாரமும், பார்வை குறைபாடுள்ள 2 பள்ளி மாணவர்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் மதிப்பில் எழுத்துக்களை பெரிதாக காட்டும் உருபெருக்கி உபகரணமும் வழங்கப்பட்டது.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குப்புசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
05-Nov-2024