உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் 3 வாரங்கள் நடைபெறாது: கலெக்டர்

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் 3 வாரங்கள் நடைபெறாது: கலெக்டர்

கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சியில் நடப்பு மாதம் முழுவதும் திங்கட்கிழமையில் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறாது என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வரும் 12ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது. எனது தலைமையில் வாணாபுரம் தாலுகா அலுவலகத்திலும், டி.ஆர்.ஓ., ஜீவா தலைமையில் கள்ளக்குறிச்சியிலும், சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங் தலைமையில் திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்திலும் நடக்கிறது.அதேபோல், ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமையில் சின்னசேலத்திலும், உதவி ஆணையர் (கலால்) செந்தில்குமார் தலைமையில் கல்வராயன்மலையிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவர் கீதா தலைமையில் சங்கராபுரத்திலும் நடக்கிறது.மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன் தலைமையில் உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்திலும் ஜமாபந்தி நடக்கிறது.பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் அளிக்கலாம்.ஜமாபந்தி நடைபெற இருப்பதால், வரும் 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ