ஆர்.கே.எஸ்., பள்ளியில் மாணவர் சேர்க்கை
கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி பண்டிகையையொட்டி மாணவர் சேர்க்கை நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி குழுமத் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தார். பள்ளி தலைவர் மணிவண்ணன், தாளாளர் திருஞானசம்பந்தம், இயக்குனர்கள் மனோபாலா, சிஞ்சு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார்.நிகழ்ச்சியில், விஜயதசமி பண்டிகையையொட்டி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க சிறப்பு வழிபாடு நடந்தது.தொடர்ந்து, நடந்த மாணவர் சேர்க்கையில், புதிதாக பள்ளியில் சேர்ந்த மழலையர்களை நெல்லில் அ, ஆ எழுத வைத்தனர். புத்தகங்கள் வழங்கப்பட்டது. துணை முதல்வர் ஜீசஸ்சுஜி நன்றி கூறினார்.