உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மழைநீர் வடிகால்கள் துார்வாரும் பணி தீவிரம்

மழைநீர் வடிகால்கள் துார்வாரும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி: நகராட்சி பகுதியில் 108 கி.மீ., நீள மழைநீர் வடிகால்கள் மற்றும் 9 கி.மீ., மழை நீர் வாய்க்கால்கள் துார்வாரும் பணி துவங்கி உள்ளன.தென்மேற்கு பருவமழை காலத்தில் மாவட்டத்தில் மழைநீர் வடிகால்கள் மற்றும் வாய்க்கால்களை துார்வாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்கள், மழை நீர் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை நகராட்சி ஆணையர் சரவணன் நேற்று துவக்கி வைத்தார்.பிரதான சாலைகளான சேலம், துருகம், காந்தி, சங்கராபுரம், கச்சிராயபாளையம் சாலைகள், சித்தேரி தெரு, ஏமப்பேர், அண்ணா நகர், விளாந்தாங்கல் தெரு, ஜே.ஜே. நகர், கிருஷ்ணா நகர், எம்.ஆர்.என்.நகர், விநாயகா நகர், ராஜாம்பாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால்கள் மற்றும் வாய்க்கால்களை பொக்லைன் இயந்திரம் மூலம் நகராட்சி பணியாளர்கள் தூர்வாரி வருகின்றனர். தொடர்ந்து முழுவீச்சில் வாய்க்கால்கள் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை