உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மீண்டும் ஆக்கிரமிப்பு

மீண்டும் ஆக்கிரமிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி துருகம் சாலையில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்புக்காக அகற்றப்பட்ட சாலையோர கடைகள் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் பருவமழைக்கால முன்னெச்சரிக்கைக்காக கழிவுநீர் கால்வாய் துார்வாருவதற்காக துருகம் சாலையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டது. கால்வாய் சீரமைப்பு பணிகள் முடிந்த அடுத்தநாளே, அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், அப்பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிக்க துவங்கியுள்ளது. அதிகாரிகள் நிரந்த தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !