மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் கலெக்டர் தகவல்
09-May-2025
கள்ளக்குறிச்சி: இந்திய செஞ்சிலுவை சங்க புதிய மாவட்டக்கிளை முதலாவது பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 20ம் தேதி நடக்க உள்ளதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதிய மாவட்ட கிளையின் முதலாவது பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. புதிய உறுப்பினர்களை அங்கீகரித்து வாழ்நாள் உறுப்பினர்களுக்கான சந்தா தொகை செலுத்துதல், நிர்வாகக் குழு ஏற்படுத்துதல், நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கிடையே தேர்தல் நடத்தி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்தல் ஆகியவை இந்த கூட்டத்தில் நடக்கிறது.கலெக்டர் அலுவலகத்தில் வரும் ஜூன் 20ம் தேதி மாலை 3:00 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில் இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்டக் கிளையில் உறுப்பினராக சேர விருப்பம் தெரிவித்துள்ளவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வாழ்நாள் உறுப்பினர்கள், அடையாள சான்று மற்றும் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளலாம்.மேலும் புதியதாக சேர விருப்பம் உள்ளவர்கள் வரும், ஜூன் 8ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டை, சுயவிவரங்கள் குறித்த ஆவணங்களுடன் பெயரை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 99769 92480 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
09-May-2025