உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ரெட்டி கஞ்சம் நல சங்கத்தினர் ஆர்.டி.ஓ.,விடம் கோரிக்கை மனு

 ரெட்டி கஞ்சம் நல சங்கத்தினர் ஆர்.டி.ஓ.,விடம் கோரிக்கை மனு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ரெட்டி கஞ்சம் நல சங்கம் சார்பில் ஜாதி சான்றிதழ் வழங்க கோரி ஆர்.டி.ஓ., விடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருக்கோவிலுார் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ரெட்டி கஞ்சம் பிரிவினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்காமல் வருவாய் துறை இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி ரெட்டி கஞ்சம் நல சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு ரெட்டி நல சங்கத்தினர் இணைந்து, திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., ஆனந்த்குமார் சிங்கை நேரில் சந்தித்தனர். தமிழ்நாடு ரெட்டி நல சங்க மாநில பொருளாளர் செல்வகுமார், மாநில இளைஞரணி தலைவர் மகேஸ்வரன், துாத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் ராஜகோபால், கந்தசாமி, திருக்கோவிலுார் ரெட்டி கஞ்சம் நல சங்க செயலாளர் வாசன் உள்ளிட்டோர் ரெட்டி கஞ்சம் ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கான அரசாணை கொடுத்து, கோரிக்கை மனுவை வழங்கினர். அப்பொழுது சங்க நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ