உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் தீ விபத்தால் வீடிழந்த குடும்பத்திற்கு ரோட்டரி கிளப் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. திருக்கோவிலுார், தாசார்புரத்தில், ராஜா, பார்வதி தம்பதியின் கூரை வீடு காஸ் கசிவு காரணமாக சமீபத்தில் தீ பிடித்து எரிந்து சேதமானது. ஏழ்மை நிலையில் இருக்கும் இக்குடும்பத்திற்கு திருக்கோவிலுார் ரோட்டரி கிளப் சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில், ஆறுதல் கூறி, பணம், அரிசி, மளிகை, துணி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் வாசன், செயலாளர் கோதம்சந்த், பொருளாளர் சவுந்தர்ராஜன், ரோட்டரி சங்க உறுப்பினர் முத்துகுமாரசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை