மேலும் செய்திகள்
அணைக்கட்டு தண்ணீரில் ரசாயனம் கலந்துள்ளதா?
16-Jun-2025
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அணைக்கட்டு பகுதியில் பொழுதுபோக்கு பூங்காவை புனரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சாத்தனுார் அணை உள்ளது. இங்கிருந்து வெளியேறும் நீர் நேராக, கடலுார் வங்கக்கடலில் கலக்கிறது.இதற்கிடையில், திருக்கோவிலுார் அணைக்கட்டு தான் மிகப்பெரிய தடுப்பணையாக உள்ளது. இங்கு நீரை தேக்க முடியாது எனினும், தடுத்து திருப்பி விடப்படும் தண்ணீர் பம்பை வாய்க்கால், மலட்டாறு, ராகவன் வாய்க்கால், சித்தலிங்கமடம் வாய்க்கால்களில் செல்கிறது.கடந்த, 1861ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ரூ.61 ஆயிரம் மதிப்பில் ஆய்வு மாளிகை யடன் கூடிய அணைக்கட்டிற்கு திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டு, ஓராண்டு காலத்தில் ரூ.55 ஆயிரத் தில் கட்டி முடிக்கப் பட்டது.அதன் பிறகு பல்வேறு காலகட்டங்களில் அணை விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டது. கடந்த, 1972ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், 2 லட்சம் கன அடியையும் தாண்டி தண்ணீர் சென்றது. இதனால் அணை சற்று பலமிழந்த நிலையில் புனரமைக்கப்பட்டது.கடந்த 'பெஞ்சல்' புயல் வெள்ளத்தில், 3 லட்சம் கன அடி நீர் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக அணைக்கட்டின் இடதுபுறக்கரை உடைந்து, அணைக்கட்டு பெருத்த சேதத்தை சந்தித்தது.இதனை புனரமைக்க அரசு, 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட வரையறை தயாரிக்கப்பட்டு டெண்டர் விடுவதற்கு தயார் நிலையில் உள்ளது.இந்நிலையில், இங்குள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகை அருகே செழித்து வளர்ந்த மரங்களுக்கு இடையே, புதர் மண்டிய பாழடைந்த பூங்கா பகுதி உள்ளது. இந்த பூங்காவை புனரமைக்க வேண்டுமு் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பொதுப்பணித்துறை அணைக்கட்டை புனரமைக்கும் நடவடிக்கையுடன் சேர்த்து பூங்காவை புதுப்பிக்க வேண்டும்.இந்த பூங்காவை புனர மைத்தால், ஆற்றில் தண் ணீர் சென்றால், கால்வாய்களில் திருப்பி விடப்படும் அழகை கண்டு ரசிக்க முடியும்.அதேபோல சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், புல்வெளிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்கினால், மிகப்பெரிய பொழுது போக்கு மையமாக பூங்கா மாற வாய்ப்புள்ளது. இதன் மூலம் பொதுப்பணித்துறை குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலித்து பராமரிக்கவும் முடியும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
16-Jun-2025