உள்ளூர் செய்திகள்

ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மாவட்ட வருவாய் நிர்வாக மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது.கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வருவாய்த் துறை சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து ஆய்வு செய்தார்.பின், குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டிய மனுக்களின் விபரங்கள், அதன் நிலுவைகள், அதற்கான காரணங்கள் ஆகியவற்றை தனித்தனியாக கேட்டறிந்தார். மேலும் நிலுவை மனுக்களை குறிப்பிட்ட கால அளவிற்குள் விசாரணை மேற்கொண்டு தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, ஆர்.டி.ஓ., லுார்துசாமி, தாசில்தார்கள், வருவாய்த் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை