உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஜமாபந்தியில் 322 மனுக்களுக்கு தீர்வு

ஜமாபந்தியில் 322 மனுக்களுக்கு தீர்வு

ரிஷிவந்தியம்: வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், 322 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் வடபொன்பரப்பி, அரியலுார், ரிஷிவந்தியம், மணலுார்பேட்டை ஆகிய 4 குறு வட்டங்களுக்கான ஜமாபந்திக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில் பட்டா மாற்றம், நில அளவீடு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 1,483 மனுக்கள் பெறப்பட்டன.அதில், 322 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. நிலுவையில் உள்ள 1,155 மனுக்கள், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நிறைவு நாள் நிகழ்ச்சியில், தீர்வு காணப்பட்ட மனுக்கள் தொடர்பான ஆணையை கலெக்டர் பிரசாந்த் பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் வெங்கடேசன், தனி தாசில்தார் ராஜலக்ஷ்மி உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை