மேலும் செய்திகள்
வரும் 9ல் கூட்டுறவுபணியாளர் நாள்
07-May-2025
கள்ளக்குறிச்சி; மாவட்டத்தில் டாம்கோ மற்றும் டாப்செட்கோ குழுக்களுக்கு ரூ.5.16 கோடியில் கடன் வழங்க தீர்மானிக்கப் பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் டாம்கோ மற்றும் டாப்செட்கோ குழுக்களுக்கு கடன் தொகை வழங்குவதற்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் விஜயசக்தி ஆகியோர் தலைமை தாங்கினர். மண்டல துணைப் பதிவாளர் சுகந்தலதா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் கணபதி, ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் சம்பத்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகர் சீரங்கன், சின்னசேலம் ஆவின் விரிவாக்க அலுவலர் பூமாலை, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகர், இணைப்பதிவாளர் அலுவலக அலுவலக கண்காணிப்பாளர்கள் சசிகலா, சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் 12 குழுக்களுக்கு, 2 கோடியே 13 லட்சம் ரூபாயும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தின் 21 குழுக்களுக்கு 3 கோடியே 3 லட்சத்து 81 ஆயிரம் என மொத்தம் 5 கோடியே 16 லட்சத்து 81 ஆயிரம் வழங்க கடன் தொகை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
07-May-2025