மேலும் செய்திகள்
சட்டம் ஒழுங்கு: கலெக்டர் ஆய்வு
30-Mar-2025
கள்ளக்குறிச்சி: வருவாய் துறை திட்டங்கள் பொதுமக்கள் அனைவருக்கும் சென்று சேர்வதை உறுதி செய்ய, அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார். மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருவாய் துறை தொடர்பான ஆய்வுகள், நீதிமன்ற வழக்குகள், தகவல் அறியும் உரிமை சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் சட்டம், ஜாதி சான்றிதழ் உண்மைத் தன்மை சரிபார்ப்பு, சமூக பாதுகாப்பு திட்டங்கள், பேரிடர் நிவாரண உதவிகள், பொதுவினியோக திட்ட பணிகள், பட்டா மாற்றம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வருவாய் துறை சேவைகளை விதிமுறைகளுக்குட்பட்டு உடனுக்குடன் வழங்கவும், அனைத்து பொதுமக்களுக்கும் முறையாக சென்று சேரும் வகையில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்தகுமார்சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
30-Mar-2025