உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், அசோக்குமார், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அய்யனார் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசுகையில், 'வரும் 26ம் கள்ளக்குறிச்சிக்கு வருகை தரும் ஸ்டாலின் புதிய கலெக்டர் அலுவலகம், புறவழிச் சாலை பஸ் நிலையம், கள்ளக்குறிச்சி மற்றும் மணலுார்பேட்டையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ சிலைகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார். அவரை வரவேற்க நிர்வாகிகள் திரளாக பங் கேற்க வேண்டும்' என்றார். கூட்டத்தில் மணலுார்பேட்டை நகர செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, நிர்வாகி சாமி சுப்ரமணியன், பொருளாளர் கோவிந்தராஜி, பொதுக்குழு உறுப்பினர் ராஜி, நிர்வாகிகள் சுகுமாறன், செல்வகுமார், உதயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ