உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்தில் போலீசை கண்டித்து சாலை மறியல்

சங்கராபுரத்தில் போலீசை கண்டித்து சாலை மறியல்

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் வாலிபரை வெட்டிய மர்ம நபர்களை கைது செய்யாத போலீசை கண்டித்து உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சங்கராபுரம் சப்ரிஜிஸ்டர் அலுவலகம் பின்புறம் வசிப்பவர் முகமது யாசர், 28; அங்குள்ள ஜெராக்ஸ் கடையில் கணினி உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜா என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், கடந்த 28 ம் தேதி, இரவு முகமது யாசர் வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள், கத்தியால் முகமது யாசர் தலையில் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்னை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து 2 நாட்கள் கடந்தும், மர்ம நபர்களை கைது செய்யாததை கண்டித்து, முகமது யாசரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை 10:00 மணிக்கு சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால், சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. மறியல் காரணமாக 20 நிமிடம் சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் - திருவண்ணாமலை மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை