உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் நெடுஞ்சாலை உட்கோட்ட அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.உதவி கோட்ட பொறியாளர் அனிதா வரவேற்றார். விழுப்புரம் சாலை பாதுகாப்பு உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் எழிலரசன், உதவி பொறியாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தனர். கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சாலை பணியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோஷங்களை எழுப்பிச் சென்றனர். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார், திருக்கோவிலுார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்யன், சாலை பாதுகாப்பு குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ