மேலும் செய்திகள்
முக்காடிட்டு போராட்டம்
11-Jan-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்கு முன் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பெரியசாமி, பழனிச்சாமி, ரவி, மணி, ராஜி முன்னிலை வகித்தனர். உயர்நீதிமன்ற ஆணைப்படி சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்துதல், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தின் அரசாணை 140 ரத்து செய்தல், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி வைத்து போராட்டம் செய்தனர்.
11-Jan-2025