உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் பெட்டியில் இருந்த ரூ.1.50 லட்சம் அபேஸ்

பைக் பெட்டியில் இருந்த ரூ.1.50 லட்சம் அபேஸ்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் பாண்டியன், 62; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மதியம் 2:30 மணிக்கு, ராஜா நகர் பகுதியில் உள்ள வங்கியில் 1.50 லட்சம் ரூபாய் எடுத்தார். பணத்தை பைக் பெட்டியில் வைத்து பூட்டி, காந்தி சாலையில் உள்ள மருந்தகத்திற்கு சென்றார். மருந்து சீட்டு எடுப்பதற்காக பெட்டியைத் திறந்தவர் மீண்டும் பெட்டியை பூட்டாமல் சென்றார். மருந்து வாங்கிய பின் வந்து பார்த்தபோது பெட்டியில் இருந்த பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பாண்டியன் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ