உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சத்தியராஜ், பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர் பழனி, மாவட்ட தலைவர்கள் செந்தில்குமார், கருணாநிதி, அண்ணாமலை ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். துாய்மை பணியாளர்களின் ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். மக்கள் நலப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட மகளிரணி நிர்வாகி சத்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி