மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
23-Jul-2025
சோற்று சட்டியுடன் நடந்த காத்திருப்பு போராட்டம்
23-Jul-2025
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வலியுறுத்தி சாப்பாட்டு சட்டியுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சியில் நடந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் வில்சன் தலைமை தாங்கினார். ஆரோக்கியதாஸ், கருணாநிதி, முருகன், மணிக்கண்ணன், வீரன், சாரதா முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கனி துவக்க உரையாற்றினார். ஏ.ஐ.டி.யூ.சி., மாநில நிர்வாககுழு வளர்மதி, வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் கல்யாணசுந்தரம் வாழ்த்துரை வழங்கினர். கொரோனா காலத்தில் முன்கள பணியாளராக பணிபுரிந்தவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், ஊராட்சியில் பணிபுரியும் கணினி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர், துாய்மை காவலர், பள்ளி சுகாதார துாய்மை பணியாளர், மகளிர் திட்ட தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலி சட்டத்தின் படி ஊதியம் வழங்க வேண்டும், ஊரக வளர்ச்சி துறையில் காலி பணியிடங்களை நிரப்புதல், தற்காலிக ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாப்பாட்டு சட்டியுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வரும் ஆக., 5ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
23-Jul-2025
23-Jul-2025