உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதல் மனைவி இறந்த சோகம் கணவர் துாக்கிட்டு தற்கொலை

முதல் மனைவி இறந்த சோகம் கணவர் துாக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி, : முதல் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சியைச் சேர்ந்த கொளஞ்சி மகன் வினோத்குமார், 35; இவரது முதல் மனைவி திவ்யா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பூச்சி கொல்லி மருந்து குடித்து இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் போதைக்கு அடிமையாகி இருந்த வினோத்குமாருக்கு, கடந்த ஒரு ஆண்டுக்கு முன், கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் மில்கேட்டைச் சேர்ந்த சங்கீதா என்பவருடம் இரண்டாவதாக திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இருப்பினும் முதல் மனைவி நினைவாகவே இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு வீட்டில், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ