மேலும் செய்திகள்
மாவட்ட சுகாதாரம் குறித்த திறன் ஆய்வுக்கூட்டம்
26-Mar-2025
கள்ளக்குறிச்சி::மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள், காய்கறிகளை மாநில அளவில் விற்பனை செய்து வருமானத்தைப் பெருக்க கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறைகள் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து துறை வாரியாக ஆய்வு செய்யப்பட்டது.கோடை பயிர்கள் சாகுபடிக்கு தேவையான விதை, உர இருப்பு விவரம் ஆய்வு செய்யப்பட்டது. தோட்டக்கலைத் துறை மூலம் உற்பத்தி செய்யப்படும் பழங்கள், காய்கறிகளை மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், பிற மாவட்டம் மற்றும் மாநில அளவில் விற்பனை செய்து வருவாயைப் பெருக்க நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார். மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருட்களின் விற்பனை விலை விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சாகுபடி பரப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
26-Mar-2025