மேலும் செய்திகள்
சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
23-Sep-2024
தியாகதுருகம்: தியாகதுருகம் மலை மீது சீனிவாச பெருமாளுக்கு திருத்தளிகை வழிபாடு நடந்தது.தியாகதுருகம் நகரின் மையப்பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மலையில் நேற்று புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு திருத்தளிகை வழிபாடு நடந்தது.மலை உச்சிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் உற்சவர் சிலை எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் மலை மீது ஏறிச்சென்று பூஜையில் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர்.
23-Sep-2024