உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / துாய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்

துாய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் ஒப்பந்த துாய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நகர மன்ற தலைவர் பேச்சுவார்த்தைக்குப்பின் நேற்று கைவிடப்பட்டது. உளுந்துார்பேட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி பகுதியில் தெருக்களில் குப்பைகள் தேங்கின. அதனைத் தொடர்ந்து, நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன் மற்றும் கவுன்சிலர்கள் துாய்மைப் பணியாளர்களுடன் நேற்று காலை 7:00 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், கலெக்டரின் அனுமதி பெற்று ஊதிய உயர்வு வழங்கப்படும், பணி நிரந்தரம் செய்வது அரசின் நடவடிக்கை பொறுத்து அமையும். பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க நடவடிக்கை வழங்கப்படும் என உறுதியுளித்தனர். அதனையேற்று துாய்மைப் பணியாளர்கள் கடந்த 5ம் தேதி முதல் நடத்திய தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று நேற்று முதல் பணிக்குத் திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !