உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாநில குத்துச்சண்டை போட்டியில் சங்கராபுரம் மாணவர்கள் அசத்தல்

மாநில குத்துச்சண்டை போட்டியில் சங்கராபுரம் மாணவர்கள் அசத்தல்

சங்கராபுரம்: மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சங்கராபுரம் மாணவர்கள் வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கம் வென்றனர். சென்னை வண்ணாரபேட்டையில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கடந்த 26 மற்றும் 27ம் தேதி நடந்தது. இதில் சென்னை, வேலுார், காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சூரியா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவ, மாணவிகள் 12 பேர் பங்கேற்றனர். பல்வேறு எடை பிரிவுகளில் நடந்த போட்டியில், சங்கராபுரம் மாணவர்கள் சாய்சரண், மோகித், நவ்நீத், நிஷாலினி, சர்வேஸ் ஆகியோர் வெள்ளி பதக்கமும், சுதர்சன், கிரீஷ் தாமோதரா, பேரரசு, வைஷ்ணவி, விக்னேஷ்வரன், கதிரவன், ராகவர்ஷினி ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர் சூரியமூர்த்தி மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை