உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் தாலுகா மருந்து வணிகர் சங்க முப்பெரும் விழா

சங்கராபுரம் தாலுகா மருந்து வணிகர் சங்க முப்பெரும் விழா

சங்கராபுரம்; சங்கராபுரம் தாலுகா மருந்து வணிகர்கள் சங்க முப்பெரும் விழா நடந்தது. சங்கராபுரம் ரோட்டரி மண்டபத்தில் தாலுகா மருந்து வணிகர்கள் சங்க ஆண்டு பொதுக்குழு, மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு, பரிசுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்கத்தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் அருணாசலம், துணைத்தலைவர் சங்கர் முன்னிலை வகித்தனர். அமைப்பாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். பொருளாளர் துரை நிதிநிலை அறிக்கை வாசித்தார். சங்கராபுரம் பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.சங்கராபுரம் இன்னர்வீல் கிளப் முன்னாள் தலைவிகள் தீபா சுகுமார், மஞ்சுளா கோவிந்தராஜ் ஆகியோர் வினாடி-வினா போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் விஜயகுமார், செயலாளர் மதியழகன், பொருளாளர் முத்துக்கருப்பன் புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். அனைத்து வியாபாரிகள் சங்க செயலர் குசேலன், முன்னாள் தலைவர் நெடுஞ்செழியன், வள்ளலார் மன்ற செயலர் ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினர். செயலர் சந்திரசேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை