உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் வள்ளலார் பள்ளி ஆண்டு விழா

சங்கராபுரம் வள்ளலார் பள்ளி ஆண்டு விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் நர்சரி, பிரைமரி பள்ளி ஆண்டு விழா நடந்தது.வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாகிருஷ்ணன், தணிக்கையாளர் சக்கரவர்த்தி, ரோட்டரி முன்னாள் தலைவர்கள் ராஜேந்திரன், மூர்த்தி, அருணாச்சலம் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். சங்கராபுரம் தாசில்தார் விஜயன் துவக்கவுரையாற்றினார். பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி,இன்னர் வீல் கிளப் தலைவி சுபாஷினி, திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, அரிமா மாவட்ட தலைவர் வேலு, வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், தீபாசுகுமார், அகல்யா, மஞ்சுளா, ரோட்டரி தேர்வு தலைவர் சங்கர் வாழ்த்துரை வழங்கினர்.பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. ரோட்டரி டிரஸ்ட் சேர்மன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியை குமாரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை