உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

உளுந்துார்பேட்டை: உளுந்தூர்பேட்டை, சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இந்த பள்ளி மாணவர் யஷ்வந்த் 589; மாணவர் ஜோதிமணி 588; மாணவி தர்ஷணி 586; என மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளியில், கணிதத் தில், 4 மாணவர்களும், வேதி யியலில், 5 மாணவர்களும், கணித அறிவியல் பாடத்தில்,15 மாணவர்களும், 'சென்டம்' பெற்றுள்ளனர்.மேலும், தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்று, 9 மாணவர்களும், ஆங்கிலத்தில், 99 மதிப்பெண்கள் 3 மாணவர்களும், உயிரியல் மற்றும் இயற்பியலில், 99 மதிப்பெண்கள் பெற்ற, தலா ஒரு மாணவரும் சாதனை படைத்துள்ளனர்.சாதனை மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர், ஆசிரியர்களையும், தாளாளர் யத்தீஸ்வரி ஆத்மா விகாச ப்ரிய அம்பா பாராட்டி வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை