உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  உதவித்தொகை திட்ட தேர்வு பயிற்சி வகுப்பு: கலெக்டர் ஆய்வு

 உதவித்தொகை திட்ட தேர்வு பயிற்சி வகுப்பு: கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்து வரும் வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு பயிற்சி வகுப்பினை கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்டத் தே ர்வு பயிற்சி வகுப்பு 6 மையங்களில் நடந்து வருகிறது. இதில், 220 மாணவர்களுக்கு பயிற்சி பெறுகின்றனர். கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வரும் திட்டத் தேர்வு பயிற்சி வகுப்புகள் கலெக்டர் பி ரசாந்த் ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்த கலெக்டர் பிரசாந்த் கூறியதாவது: இத்தேர்வு 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 7ம் வகுப்பு பாடத்திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பினை மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்களுக்கு 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வரை தொடர்ந்து அரசு பள்ளியில் பயின்றால் அந்த மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 என ஒரு ஆண்டிற்கு ரூ.12,000 என மொத்தம் ரூ.48,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி