அரசு பொதுத்தேர்வில் சாதனை; பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் அரசு பொது தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தினர் பாராட்டு விழா நடத்தினர்.கள்ளக்குறிச்சி வாசவி பவனத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மோகன், செயலாளர் கேசவ ராமானுஜம், பொருளாளர் பூங்குன்றன், துணைத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, முத்துசாமி, சாந்தி, இணைச் செயலாளர் பாவாணன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் சடகோபன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர் சி.இ.ஓ., கார்த்திகா, அரசு பொதுத் தேர்வில் உயர் மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், மற்றும் 28 மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.நிர்வாகிகள் தங்கவேலு, மலரடியான், நல்லாப்பிள்ளை, ராஜேந்திரன், ஆறுமுகம், செல்வராணி, மரியமிக்கேல், அம்பேத்கார், வரதராஜன், பெரியம்மாள், சுப்ரமணியன் வாழ்த்தி பேசினர். வட்ட பொருளாளர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.