உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின்வாரிய அலுவலகத்தில் ஸ்கூட்டி தீப்பற்றி எரிந்து சேதம்

மின்வாரிய அலுவலகத்தில் ஸ்கூட்டி தீப்பற்றி எரிந்து சேதம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மின்வாரிய அலுவலகத்தில் ஸ்கூட்டி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.உளுந்தூர்பேட்டை நகராட்சி காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் செல்லப்பெருமாள், 54; சலவை தொழிலாளியான இவர், வீட்டு சர்வீசுகாக உளுந்துார்பேட்டை அடுத்த தக்கா பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு ஸ்கூட்டியில் சென்றார்.அங்கு மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து விட்டு மீண்டும் ஸ்கூட்டியை எடுப்பதற்காக வந்தபோது நேற்று காலை 10.30 மணியளவில் ஸ்கூட்டியிலிருந்து புகை வந்து உடன் தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உளுந்துார்பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் ஆனால் அதற்குள் ஸ்கூட்டி முழுவதும் எரிந்து சேதமானது.இதுகுறித்து உளுந்துார் பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ