உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 10ம் வகுப்பு பொதுத்தேர்வு; பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு; பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 20 ஆயிரத்து, 808 மாணவ, மாணவியர் எழுத உள்ளனர்.மாவட்டத்தில், 214 அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 10 ஆயிரத்து 741 மாணவர்கள்; 10 ஆயிரத்து, 67 மாணவியர்; 10 ம் வகுப்பு படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. இதனால் மாவட்டத்தில், 90 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, வகுப்பறைகளை தயார் செய்யும் பணி நடக்கிறது. இந்த பொதுத்தேர்விற்கு, 1,062 தனித்தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்கராபுரம் மற்றும் உளுந்துார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ளன.தேர்வு நடக்கும் நாட்களில் வழித்தட அலுவலர் மேற்பார்வையில், 29 வழித்தடங்கள் வழியாக அனைத்து மையங்களுக்கும் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும். அதேபோல தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் அனைத்தும் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருக்கோவிலுார் வித்யா பாலமந்திர் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி ஏந்திய போலீசார், சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட உள்ளனர். முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 2,800 அரசு அலுவலர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுத்தேர்வு வரும், ஏப்., 15,ம் தேதி நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை