அன்பு கரங்கள் பயனாளிகள் தேர்வு
திருக்கோவிலுார்; கண்டாச்சிபுரம் தாலுகாவில் அன்பு கரங்கள் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய கள ஆய்வு நடந்தது.தாய், தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் தாயையோ, தந்தையையோ இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வருபவர்களைக் கண்டறிந்து, அவர்களை அரசு தொடர்ந்து பாதுகாத்து, இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர மாதம் 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் அன்பு கரங்கள் திட்டத்தை அறிவித்துள்ளது.இத்திட்டத்தில் பயன்பெறும் உண்மையான பயனாளர்களைக் கண்டறியும் பணி கண்டாச்சிபுரம் தாலுகாவில் சமூக நலத்திட்ட தனி தாசில்தார் ஜெயலட்சுமி தலைமையில், முகையூர், செங்கமேடு, மடவிளாகம் உள்ளிட்ட கிராமங்களில் வருவாய்த்துறை அலுவலர்களுடன் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர்.