உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரூ.2 கோடி கடன் உதவி பெற சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம்

ரூ.2 கோடி கடன் உதவி பெற சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு வேளாண் உட்கட்டமைப்பு நிதியின்கீழ் விவசாயிகள், சுய உதவிக்குழுக்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; வேளாண்மை உற்பத்தியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்காக அரசு வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரூ.73 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிக்கு ரூ. 2 கோடி கடன், 7 ஆண்டுகள் வரை 3 சதவீத வட்டி மானியம் மற்றும் அரசின் கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இதற்கு விவசாய தொழில் முனைவோர், விவசாய குழுக்கள், சுய உதவிக்குழுக்கள், கூட்டுப்பொறுப்பு குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு, புது நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மின்னணு வணிக மையம், சேமிப்பு கிடங்கு, குளிர்பாதன கிடங்கு, சிப்பம் கட்டும் கூடங்கள், தரம் பிரிக்கும் இயந்திரங்கள், மெழுகு பூசும் மையங்கள், பண்ணை கழிவு மேலாண்மை சார்ந்த உட்கட்டமைப்பு, மண்புழு உரம் தயாரித்தல், சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க கடன் பெறலாம். இதற்கு https://agriinfra.dac.gov.inஎன்ற இணையதள முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் வங்கிக் கிளைகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, நபார்டு வங்கி, வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், மாவட்ட தொழில் மைய அலுவலர்கள், வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை