சாலையில் தேங்கும் கழிவுநீர்; பொதுமக்கள் சாலை மறியல்
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே கழிவு நீர் கால்வாய் அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் 3000 பேர் வசிக்கின்றனர். இங்கு கால்வாய் சிதிலமடைந்து கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை மற்றும் தொற்றுநோய் அபாயம் தொடர்கதையாக உள்ளது. சாலையின் இரு புறமும் கழிவு நீர் கால்வாய் கட்டகோரி ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை புதுப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே கல்வராயன் மலை செல்லும் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி மறியல் செய்தனர்.தகவலறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் செய்தவர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுயில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.