மாநில அளவில் குத்துச்சண்டை போட்டி சங்கராபுரம் மாணவர்கள் வெற்றி
சங்கராபுரம்: மாநில அளவிலான குத்துசண்டை போட்டியில் சங்கராபுரம் மாணவர்கள் வெற்றி பெற்று பரிசுகள் பெற்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் மாநில அளவிலா ன குத்து சண்டை போட்டி நடந்தது. இதில் சென்னை, வேலுார், காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவ மாணவிகள 12 பேர் பங்கேற்றனர். எடை பிரிவுகளின் படி நடந்த இப்போட்டியில் மாணவர்கள் சாய்சரண், மோகித், நவநீத், நிஷாலினி, சர்வேஷ் ஆகியோர் வெற்றி பெற்று வெள்ளி பதக்கம் பெற்றனர். அதேபோல் சுதர்ஷன், கிரிஷ் தாமோதரா, பேரரசு, வைஷ்ணவி, விக்னேஸ்வரன், கதிரவன், ராகவர்ஷினி ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றனர். குத்துசண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பயிற்சியாளர் சூரியமூர்த்தி மற்றும் பெற்றோர்கள் வழ்த்தினர்.