உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்கா விற்ற கடைக்காரர் கைது

குட்கா விற்ற கடைக்காரர் கைது

திருக்கோவிலுார்: மணம்பூண்டியில் குட்கா விற்பனை செய்த பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.அரகண்டநல்லுார் அடுத்து மணம்பூண்டியைச் சேர்ந்தவர் குருராஜ், 40; அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.இவரது கடையில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் நேற்று காலை சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் இருந்த 95 குட்கா பாக்கெட்டுகளை கைப்பற்றி, குருராஜ் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, புக்கிரவாரியில் பெட்டிக் கடையில் குட்கா விற்ற வாணவரெட்டியைச் சேர்ந்த பரமசிவம், 46; என்பவரை கைது செய்து மூன்றரை கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி