உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முற்றுகை போராட்டம் மாற்றுத் திறனாளிகள் கைது

முற்றுகை போராட்டம் மாற்றுத் திறனாளிகள் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 200 பெண்கள் உட்பட 320 மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கோரிக்கை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆறுமுகம், பொருளாளர் மீனாட்சி, துணை செயலாளர்கள் சுதா, கொளஞ்சி, துணைத் தலைவர் பத்மாவதி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வரும் 7ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 பெண்கள் உட்பட 320 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை