உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆர்.கே.எஸ். மாஸ்டர்ஸ் மெட்ரிக் பள்ளியில் சிங்கப்பெண் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி  

ஆர்.கே.எஸ். மாஸ்டர்ஸ் மெட்ரிக் பள்ளியில் சிங்கப்பெண் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி  

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ். மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சிங்கப்பெண் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சிங்கப்பெண் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவன நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் ராகேல் ஜாய்ஸ் மேரி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் தனலெட்சுமி வரவேற்றார். சப்–இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் காவலர் சுப்புலெட்சுமி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் இருந்தால் உரிய வழியில் தெரிவிக்க வேண்டும். சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், உரிய வழிகாட்டுதலோடு வலைதளங்கள் பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். பள்ளி துறை முதல்வர் உலகநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை