வீரட்டானேஸ்வரர் கோவில் தீப விழாவில் சொக்கப்பனை
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு ஆனந்த வள்ளி சமேத சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் எழுந்தருளி சொக்கப்பனை ஏற்றும் வைபவம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.